ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2025-04-27 12:15 GMT

பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சி 14-வது வார்டு புளியம்பாரா-கோழிக்கொல்லி சாலையில் மின்கம்பங்களில் புதிதாக தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன. ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையில் தெருவிளக்குகள் தற்போது பழுதடைந்து ஒளிருவது இல்லை. மேலும் அதற்கான சுவிட்ச் போர்டு மிகவும் ஆபத்தான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தெருவிளக்குகளை உடனடியாக சீர் செய்து, மின் விபத்து ஏற்படும் முன்பு சுவிட்ச் போர்டை பாதுகாப்பாக அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்