கோத்தகிரி காம்பாய் கடையில் இருந்து கடைவீதி, டோபிகானா வழியாக நீரோடை செல்கிறது. இந்த நீரோடையில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் அந்த ஓடையில் நீரோட்டம் தடைபட்டு வருகிறது. மேலும் மழைக்காலத்தில் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கோடைகாலத்தை பயன்படுத்தி நீரோடையை உடனடியாக தூர்வார வேண்டும்.