காங்கயம் அரசு மருத்துவமனையில் தினசரி சேகரமாகும் குப்பைகள் அள்ளப்படாமல் மிகவும் துர்நாற்றம் வீசும் அளவிற்கு வளாகத்திற்குள்ளேயே கிடக்கிறது. இதனால் தற்காலிகமாக மருத்துவ கழிவுகள் மற்றும் அன்றாடம் சேகரமாகும் குப்பைகள் மருத்துவமனை வளாகத்திற்குள் ஆங்காங்கே கொட்டி தீயிட்டு அழிக்கின்றனர். இதனால் நோயாளிகள் அவதிப்படுகிறார்கள். எனவே மருத்துவ மனை வளாகத்திற்குள் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
