மாணவர்கள் அவதி

Update: 2025-04-27 07:58 GMT

கொட்டாரம் சந்திப்பில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை வகுப்பறைகள் உள்ளன. 8 பிரிவுகள் இங்கு உள்ளன. சுமார் 200 குழந்தைகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் ஓடுகளால் ஆன மேற்கூரை பழுதடைந்து மழை நேரங்களில் உடைந்த ஓடுகள் வழியாக மழைநீர் ஒழுகுகிறது. இதனால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவர்கள் நலன்கருதி உடைந்த ஓடுகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்