கள்ளக்குறிச்சி கடைவீதியில் சாலையை பலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நொிசல் ஏற்படுவது மட்டுமின்றி விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.