சேதமடைந்த கட்டிடம் சரிசெய்யப்படுமா?

Update: 2025-04-20 18:46 GMT
மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வெள்ளிமேடுபேட்டை- தழுதாளி சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த பணியின் போது ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவர் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. சாலைப்பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் சேதமடைந்த கட்டிடத்தை அதிகாரிகள் சரிசெய்யவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கட்டிடத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

மயான வசதி