நடுவீரப்பட்டு அருகே வி.காட்டுப்பாளையத்தில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவைகள் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை கடிக்க விரட்டுகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவே பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?