தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். காலனி குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் இந்த பகுதியில் பொது சுகாதார வளாகம் இல்லை. இதனால் தொலைவில் உள்ள கழிவறைக்கு சென்று வரவேண்டி உள்ளது. அதிக மக்கள் ஒரே கழிவறையை பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த குடியிருப்பு பகுதியில் புதிய சுகாதார வளாகம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரன், சேலம்.