அறிவிப்பு பலகை அமைக்கலாமே!

Update: 2025-04-20 17:15 GMT

நங்கவள்ளியில் இருந்து தாரமங்கலம் செல்லும் வழியில் ஆலமரம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் 2 பிரிவு சாலைகள் உள்ளன. பிரிவு சாலையும், பிரதான சாலையும் இணையும் பகுதியில் அறிவிப்பு பலகை இல்லை. மேலும் இப்பகுதியில் இரவில் எந்த வித வெளிச்சமும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அதிகப்படியான விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி மின் விளக்குகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாந்தமூர்த்தி, சேலம்.

மேலும் செய்திகள்

மயான வசதி