தொளசம்பட்டியில் இருந்து தாரமங்கலம் செல்லும் வழியில் அமரகுந்தி பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகே சொக்கநாதர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கிணறு திறந்த நிலையில் பாதுகாப்பின்றி அபாய நிலையில் இருக்கிறது. இதனால் அப்பகுதி குழந்தைகளின் பாதுகாப்பை கருதி அபாய நிலையில் உள்ள கிணற்றை சுற்றி வேலி அமைக்க அதிகாரிகள் முன் வருவார்களா?
-சசிகுமரன், தாரமங்கலம்.