கொடைரோடு சுற்றுவட்டார பகுதிகளான அம்மையநாயக்கனூர், காமலாபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் வீட்டின் முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று விடுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வீடுகளின் முன்பு மோட்டார் சைக்கிள்களை நிறுத்திச்செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே மோட்டார் சைக்கிள்கள் திருடுபோவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்.