திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் கொடைரோடு, அம்மையநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இணைப்பு சாலைகளில் கார், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி குறுக்கும், நெடுக்குமாகவும், எதிரெதிர் திசையிலும் செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சாலையை கடக்க முயலும் பாதசாரிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அதோடு வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.