ஆண்டிப்பட்டி தாலுகா சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள சாக்கடை கால்வாய் மூடி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாக்கடை கால்வாய் மூடியை விரைவாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.