சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரியின் புறநோயாளிகள் பிரிவு வளாகத்தின் முன்பு ஆம்புலன்சு ஒன்று பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. தனியார் தொண்டு நிறுவனம் ஆஸ்பத்திரிக்கு நன்கொடையாக கொடுத்த இந்த ஆம்புலன்சு, டயர்களில் காற்றிழந்து கிடக்கிறது. எனவே, ஆஸ்பத்திரி நிர்வாகம் இந்த ஆம்புலன்சில் உள்ள கோளாறுகளை சரி செய்து, நோயாளிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.