கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவை அங்குள்ள கடைகளுக்குள் புகுந்து காய்கறிகள், பழங்கள் உள்பட உணவு பொருட்களை எடுத்து தின்று சேதப்படுத்தி வருகின்றன. இதனால் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் அவர்களை குரங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்கு குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் அவற்றை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.