மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதி எப்போதும் வாகன போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்படும். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதும் வழக்கமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே இந்த சந்திப்பு பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.