தொட்டியம் வட்டம், அப்பணநல்லூர் கிராமத்தில் ஒரு மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து அப்பகுதி பொதுமக்களுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. இந்திிலையில் மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பத்தில் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இதனால் சில நேரங்களில் அடிக்கடி மின்வினியோகம் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆ்ர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.