வாணாபுரத்தில் மழையின் அளவை கணக்கீடுவதற்காக மழைமானி அமைக்கப்பட்டது. ஆனால் அதனை அதிகாரிகள் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அந்த மழைமானி பயன்பாடின்றி காட்சி பொருளாக இருந்து வருகிறது. எனவே, மழைமானியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.