கொல்லிமலை அடிவாரத்தில் கருவாட்டு ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த ஆற்று தரைப்பாலத்தில் துணிகள் துவைப்பது, வாகனங்களை சுத்தப்படுத்துவது போன்ற பல்வேறு பணிகளை செய்து வருவதால் ஆற்று நீர் மாசடைந்து வருகிறது. எனவே குடிநீர் ஆதாரமாக விளங்கும் அந்த பகுதியை சுத்தமாக வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-சரவணன், வெண்டாங்கி.