செங்கல்பட்டில் இருந்து சென்னை வரும் ஏராளமான பஸ்கள் வருவாய் சேவைகள் இழப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது செங்கல்பட்டில் இருந்து அதிக அளவு மக்கள் பஸ் சேவையை பயன்படுத்துவதால், செங்கல்பட்டில் இருந்த தியாகராய நகர், வேளச்சேரி, மந்தைவெளி, கோயம்பேடு உள்பட நிறுத்தப்பட்டுள்ள பஸ் சேவையைகளான மீண்டும் இயக்க வேண்டும். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.