திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, நண்பர்கள் நகரில் சுமார் ரூ.10 லட்சம் செலவு செய்து நகராட்சி நிர்வாகம் யோகா மையம் கட்டியுள்ளது. ஆனால், இந்த யோகா மையம் ஒரு ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே, நகராட்சி அதிகாரிகள் உடனடியாக யோகா மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.