திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 10 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டபப்ட்டது. அதனை அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்தனர். பின்னர் அந்த சமுதாய கூடத்தை பயன்படுத்தாமல் அப்படியே போட்டு விட்டனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளாக சமுதாய கூடம் அப்படியே காட்சி பொருளமாக மாறி விட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமுதாய கூடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.