மயிலாடும்பாறையில் சிறப்பாறை ஓடையை ஆக்கிரமித்து நாணல் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் ஓடையில் கொசுப்புழுக்கள் உருவாவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஓடை நீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே ஓடையில் வளர்ந்துள்ள நாணல் செடிகளை உடனே அகற்ற வேண்டும்.