நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையில் செயல்படும் மின்சார வாரிய அலுவலகத்துக்கான கட்டிடம் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை கான்கிரீட் பெயா்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த கட்டிடத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.