சாக்கடைக்கு மூடி அமைக்கப்படுமா?

Update: 2025-04-06 16:58 GMT

 சேலம் முள்ளுவாடி ரெயில்வே கேட்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள பாதாள சாக்கடையின் கான்கிரீட் மூடி இல்லாமல் உள்ளது. போக்குவரத்து அதிகமான சாலை என்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மழை பெய்தால் பாதாள சாக்கடை நிரம்பி இருக்கின்ற இடமே தெரியாத அளவுக்கு மழை நீர் சூழ்ந்துவிட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடைக்கு விரைந்து கான்கிரீட் மூடி அமைக்க வேண்டும்.

-ராமன், சேலம்.

மேலும் செய்திகள்