பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

Update: 2025-04-06 16:56 GMT

சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றன. இங்குள்ள சுகாதார வளாகம் உரிய பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் முகம் சுழித்தவாறு செல்கின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சசிகுமார், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்