பாப்பாரப்பட்டியில் நகரை ஒட்டி சின்ன ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மழைநீர் தேங்கும் பரப்பில் பெரும் பகுதியை ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து வளர்ந்து உள்ளன. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அவ்வப்போது கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே மழை நீரை சேகரிக்கும் வகையில் இந்த ஏரியில் அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், பாப்பாரப்பட்டி.