அந்தியூர் தவுட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை ரோட்டில் நின்று கொண்டு ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொள்கின்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி கடிக்கின்றன. தெருக்களில் விளையாடக்கூடிய சிறுவர்களையும் கடித்து விடுகின்றன. பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.