பொதுமக்கள் கோரிக்கை

Update: 2025-04-06 14:39 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பஸ் நிலையத்தில், செங்கல்பட்டு மார்க்கமாக பஸ் செல்லும் வழியில் ஆங்காங்கே இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பஸ் டிரைவர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. அதுமட்டுமின்றி, பஸ்சில் பயணம் செய்யும் பொதுமக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இருசக்கர வாகனம் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்