திருவள்ளூர் மாவட்டம், சின்னகளக்காட்டூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ரூ.5 லட்சம் மதிப்பில் சோலார் மின்விளக்குடன் கூடிய நவீன விளையாட்டு திடல் உள்ளது. இந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததால் உடைக்கப்பட்ட பழைய சாலை கழிவுகள் விளையாட்டுத் திடலில் போடப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு திடலில் விளையாட சிரமமாக உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் இந்த கழிவுகளை சுத்தம் செய்து விளையாட்டு திடலை சீரமைக்க வேண்டும்.