சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள பசும்பொன் தெரு மற்றும் சிட்கோ தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை ஓரத்தில் மீன் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதுமட்டுமின்றி மீன் கழிவுகள் அங்கேயே விட்டுச்செல்வதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.