சென்னை மாம்பலம் ரெயில் நிலையத்தை தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ரெயில் நிலையத்தில் நடைமேடையின் இருபுறமும் உள்ள, இரும்பு தகடுகள் மிகவும் துருப்பிடித்து உள்ளது. மேலும், எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விரைவில் பழுதடைந்துள்ள, இரும்பு தகடுகளை அகற்ற ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.