அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம், இலை கடம்பூர் கிராமத்தில் ஆர்.எஸ்.மாத்தூர் செல்லும் சாலையோரத்தில் ஒரு ஆலமரம் உள்ளது. தற்போது இந்த ஆலமரத்தின் அடிப்பகுதி பாதி எரிந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும்போது இந்த ஆலமரம் அடியோடு சாலையில் சாய்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள இந்த ஆலமரத்தை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.