ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2025-04-06 11:43 GMT

அரியலூர் மாவட்டம், சுத்தமல்லி அணையில் இருந்து கோடைகால பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். சமீப காலமாக அது வெறும் சடங்கு என்கிற வகையில் மட்டுமே நடைபெற்று வருகிறது. ஏனென்றால் சுத்தமல்லி அணையை காண வரத்து வாய்க்கால்களும் சரியாக தூர்வரப்படாமல் தண்ணீர் வரத்து இல்லாத நிலையில் அணையில் தண்ணீர் குறைந்தே காணப்படுகிறது. அப்படியே பாசனவாய்க்காலில் திறந்து விடப்பட்டாலும் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாசனம் தரக்கூடிய சுத்தமல்லி வாய்க்கால் முழுவதும் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல இடங்களில் மண் கொட்டி வாய்க்காலை மூடி தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் மானாவாரி பயிர்கள் விளைய வைப்பது விவசாயிகளுக்கு முடியாமல் போய்விட்டது. பல இடங்களில் விளைநிலங்கள் மனை பகுதிகளாக மாற்றப்பட்டு வருவது வேதனைக்குரியதாக உள்ளது. எனவே சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள நிலப்பரப்புகளை மீட்டு சுத்தமல்லி வாய்க்காலை மீண்டும் தூர்வாரி விவசாயத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்