கோத்தகிரி பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடவசதி எதுவும் இல்லை. இதனால் பஸ் நிலைய பகுதிக்கு அருகில் வாகனங்கள் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அங்கு வாகனங்களை நிறுத்த போலீசார் அனுமதிப்பது இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பஸ் நிலைய பகுதியில் வாகனங்கள் நிறுத்த போலீசார் அனுமதிக்க வேண்டும், இல்லையென்றால் வாகன நிறுத்துமிடம் அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.