நிழற்குடை தேவை

Update: 2025-04-06 09:06 GMT

நாகர்கோவிலில் இருந்து கீரிப்பாறை செல்லும் சாலையில் இறச்சகுளம் சந்திப்பு உள்ளது. இப்பகுதியில் அரசு பள்ளி, மருத்துவமனை உள்ளது. இந்த சந்திப்பில் இருந்து தான் ஆரல்வாய்மொழி, தாழக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சந்திப்பில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் மழையிலும், வெயிலும் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலின் தாக்கதால் அருகில் உள்ள கடையின் முகப்பு பகுதியில் ஒதுங்கி நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் நலன்கருதி அங்கு நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிகண்டன், இறச்சகுளம்.

மேலும் செய்திகள்