அருமநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புளியடி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மேல்நிலை குடிநீர் நீர்தேக்க தொட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புதிதாக கட்டப்பட்டது. ஆனால், இதுவரை அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. மேலும், தற்போது ஞானம் பகுதியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மேல்நிலை குடிநீர் நீர்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி மனோகரன், புளியடி.