நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2025-04-06 09:02 GMT

பொன்மனை பஞ்சாயத்துக்கு உட்பட்ட மங்கலம் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தின் அந்த பகுதியை சேர்ந்த 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த மையத்தின் சுவா்கள் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் ஜன்னல், கதவுகள் சேதமடைந்துள்ளது. இதனால் தற்போது அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கட்டிடத்தை சீரமைத்து பயன்பட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கீதா, மங்கலம். 

மேலும் செய்திகள்