மூங்கில்துறைப்பட்டு அருகே வடபொன்பரப்பியில் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவைகள் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து அங்குள்ள உணவு பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் சில நேரங்களில் சாலையில் நடந்து செல்பவர்களை கடிக்க விரட்டுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா