சேலம் பெரமனூர் 40 அடி ரோட்டில் ரேஷன் கடைக்கு முன்பாக டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரையொட்டி குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் மின்வாரிய பணியாளர்கள் பராமரிப்பின் போது டிரான்ஸ்பார்மர் அருகே செல்ல மிகவும் சிரமம் அடைகின்றனர். விஷபூச்சிகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. எனவே இங்கு தேங்கி உள்ள குப்பைகளையும், டிரான்ஸ்பார்மரை ஆக்கிரமித்த செடி, கொடிகளையும் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.
-பிரதாப், சேலம்.