வெண்ணந்தூர் அருகே உள்ள அத்தனூர் 10-வது வார்டு கலைஞர் நகர் பகுதியில் கிணறு ஒன்று உள்ளது. இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாடின்றி கைவிடப்பட்டது. தற்போது கிணற்றின் தடுப்பு சுவர் இடிந்து பாழடைந்து உள்ளது. குடியிருப்பு பகுதிக்கு அருகே கிணறு உள்ளதால் குழந்தைகள், முதியவர்கள் கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும் கிணற்றில் உள்ள தண்ணீர் துர்நாற்றம் வீசுவதுடன், குப்பைகள் தேங்குவதாலும் அதிக அளவில் கொசு உற்பத்தி ஆவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பாழடைந்த கிணற்றை மண்கொட்டி அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தனபாபு, நாமக்கல்.