பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இங்கு மக்களுக்கு இடையூறாக இரவு நேரம் மட்டும் இல்லாமல், பகல் நேரங்களிலும் மதுபிரியர்கள் மது குடிப்பதும், இரவு நேரங்களில் வரும் பயணிகளிடம் பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மதுபிரியர்களின் பிடியில் சிக்கியுள்ள இந்த பஸ் நிலையத்தை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும்.
-அறிவழகன், பாப்பிரெட்டிப்பட்டி.