திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு, அன்பழகன் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கிணறு ஒன்று ஆபத்தான முறையில் திறந்து உள்ளது. சிறுவர்கள் விளையாடும் பகுதி என்பதால் யாராவது தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி அதிகாரிகள் இந்த கிணறை மூட அல்லது அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.