தெருநாய் தொல்லை

Update: 2025-03-30 14:09 GMT

திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு, பட்டூர் அருணாச்சலம் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலைகளில் நாய்கள் அட்டகாசம் செய்து வருகிறது. மேலும், நடந்து செல்பவர்களையும், வாகனத்தில் செல்பவர்களையும் நாய்கள் கடித்த துரத்துகிறது. இந்த வழியாக செல்லவே வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்