சென்னை அடையாறு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பின்புறம் கஸ்தூரிபாய் நகர் 4 மற்றும் 5-வது மெயின் ரோடு சாலை அருகே செடி ,கொடி அடர்ந்து காணப்படுகிறது. இதனால் அருகில் இருக்கும் வீடுகளில் தேள், பூரான் போன்ற விஷ பூச்சிகள் படையெடுக்கின்றன. வீடுகளில் உள்ள குழந்தைகள், பெண்கள் , வயதானவர்கள் அனைவரும் இதனால் அச்சப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.