தூர்வாரப்படாத ஏரிகள்

Update: 2025-03-30 13:49 GMT

அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் பாசன ஏரிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு சில ஊர்களில் ஏரி பாசனத்தை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏரிகள் சரியாக தூர்வாரப்படததால் மழைக்காலங்களில் மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், விவசாய நிலங்கள் பாசன வசதி இன்றி பயிர்கள் கருகும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தூர்வாரப்படாத ஏரிகளை வெயில் காலங்களில் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்