ஒளிராத தெருவிளக்கு

Update: 2025-03-30 12:26 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பழைய பஸ் நிலையம் அருகில் காமராஜர் சிலை முன்பு உள்ள உயர் கோபுர மின்விளக்கு மற்றும் பங்களா தெருவில் பொதுநூலகம் முன்பாக உள்ள மின் விளக்கும் கடந்த சில வாரங்களாக எரியாத நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால் இரவில் அந்த வழியாக செல்பவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு பகுதிகளில் உள்ள மின்விளக்கை சீரமைத்து தருவார்களா?

மேலும் செய்திகள்