கூடலூர் நகருக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் நெடுஞ்சாலைத்துறையினரால் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தடுப்புகளை இரவில் சமூக விரோதிகள் உடைத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் நடைபாதைகளில் இருந்து விலகி சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி இரும்பு தடுப்புகளை புதிதாக பொருத்தவும், அதை சேதப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.