கூடுதல் டாக்டர்கள் வேண்டும்

Update: 2025-03-30 11:45 GMT

கோத்தகிரியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினமும் சிகிச்சைக்காக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் சிகிச்சை வரும் நோயாளிகளுக்கு ஏற்ப ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பணியில் இல்லை. ஒரு டாக்டர் மட்டுமே பணியாற்றி வருவதால் அனைத்து நோயாளிகளும் உரிய சிகிச்சை பெற முடிவது இல்லை. இதனால் நோயாளிகள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே கூடுதல் டாக்டர்களை பணியமர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்