ராமநாதபுரம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்களின் குறுக்கே நாய்கள் பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.